அரசியல் திருவிளையாடலை கண்டு களியுமினே!


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் நாடுபூராகவும் அரசியல் திருவிளையாடல்கள் அரங்கேறியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி யில் இருந்து வீழ்த்த வேண்டும் என ஒரு தரப்பு கங்கணம் கட்டி நிற்கிறது.

ஆட்சியைப் பிடித்தே ஆவோம் என்பது முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தரப்பின் நிலைப்பாடு.
இவை ஒருபுறமிருக்க, மகிந்த ராஜபக்­ வின் கை ஓங்குவது அவ்வளவு நல்லதல்ல என்ற நிலைப்பாட்டில் அமெரிக்காவும் இந்தி யாவும் மிகவும் கவனமாக இருக்கின்றன.
இந்த நாடுகளின் போக்கு தனக்கு உலை வைத்து விடுமோ என்ற ஏக்கம் மகிந்த ராஜ பக்­வை உலுக்கவே செய்கிறது.

இவை ஒருபுறமிருக்க, வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற் காக கடும் பிரயத்தனங்கள் நடந்து கொள் கின்றன.
சுருங்கக்கூறின் ஆடு, கீரை, புலி என்ற  கதை போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது யார் என்ற இழுபறிகள் உடனடியாகத் தீரப் போவதில்லை.

இதல் வேடிக்கை என்னவெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனக்குள் வைத்துக் கொண்டு காய்நகர்த்திய பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை ஓரங்கட்ட நினைத் தார்.
நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கதைக்க மாட்டேன் என்று தந்தி தொலைக் காட்சிக்கு செவ்வி வழங்கியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இன்று பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டும் என்று கோசம் எழுப்புமளவில் அவரின் அரசியல் எதிர்காலம் அமைந்துள்ளது.

அதேசமயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் ஈழமக்கள் ஜனநாய கக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந் தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது எனத் தடுத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர்.
டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகினால், அவருக்கான வாக்கு வங்கி அதிகரித்து விடும் என்ற பயத்திலேயே டக்ளஸ் தேவானந்தாவு க்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு.

ஆனால் இப்போது புதிய அமைச்சரவை அமைக்கும் பட்சத்தில் டக்ளஸ் தேவானந்தா வுக்கு வழங்கப்பட்டால், அதனைத் தாம் எதிர் க்கமாட்டோம் என்றும், அதற்குப் பரிகாரமாக வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் தமது ஆட்சி அமைவதற்கு டக்ளஸ் தேவானந்தா மானசீகமாக ஆதரவு தர வேண்டும் என்பது போன்ற பண்டமாற்றுப் பேச்சுக்கள் நடப்பதான தகவல்களும் உண்டு.

இதேவேளை வடக்கு மாகாண சபையைக் குழப்பிய இளம் உறுப்பினர்கள் இப்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதான செய்திகளும் வந்தவண்ணமுள்ளன.
கடவுளே! இது இங்கு என்றால் கிழக்கில் சூரியனுடன் சேர்ந்தால்தான் வீட்டுக்கு வெளிச் சம் என்ற நிலைமை இருக்கிறதாம்.
ஓ! கடவுளே உன் ஒட்டுமொத்தத் திருவிளை யாடலும் இலங்கை அரசியலில் நுழைந்து விட்டதோ! 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila