கண்டியில் இணையத்தள சேவை முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை முழுமையிலும் பேஸ்புக் தளம் முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் நாங்கள் இது தொடர்பில் விசாரித்த போது கண்டி பிரதேசத்தில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மையமாக கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவோர் குறித்து கவனம் செலுத்துவதற்காகவே இவ்வாறு இணைய வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்
பாதுகாப்பு அமைச்சு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.