ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரே பொருத்தமானவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேலும் பலமடையச் செய்யும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அதனைப் படிப்படியாக் முன்னெடுத்து வருகிறோம். ஆகவே விரைவில் மீண்டும் கட்சியை பலமான நிலைக்கு கொண்டு வருவோம்.
ஆகவே அவருக்கு ஆதரவு வழங்கும் எந்தக் கட்சியும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.