குச்சவெளிபிரதேசத்தை சிங்கள மயமாக்கச் சதியா? - அரச அதிபருக்கு முன்னணி கடிதம்


தென்னவன் மரபு அடி -(தென்னைமரவாடி) பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் நிறுவப்பட்டுள்ள அத்துமீறிய வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்கடிதத்தில், குறித்த பிரதேசமானது குச்சவெளி பிரதேசசபைக்குச் சொந்தமானது என்பதைக் குறிப்பிட்டுள்ள அவர் இந்நடவடிக்கை தென்னவன் மரபு அடி (தென்னைமரவாடி) மக்களுக்குச் சொந்தமான காணிகளை அத்துமீறிக் கையகப்படுத்தும் மறைமுக நடவடிக்கையின் முதற்படியென தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



சிங்களத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ள இப்பெயர்ப்பலகையில் உங்கள் யாவரையும் வரவேற்கின்றோம் - பதவிசிரிபுர பிரதேச சபை - தூரம் -கி.மீ.12.3 என எழுதப்பட்டுள்ளது. என்பதை வெளிக்காட்டியுள்ள அவர்
 குச்சவெளிப் பிரதேசசபைக்கு உரித்துள்ள இடத்தில் பதவிசிரிபுர பிரதேசசபைக்கான வரவேற்புப்பலகை இடப்பட்டுள்ள இந்நிகழ்வானது  தமிழ்த் தேசத்தில் ஒரு உள்ளுராட்சி சபைக்குரிய இடத்தில் மற்றொரு உள்ளுராட்சி சபை தனது வரவேற்புப் பலகையை நட்டுள்ள முதன்முதல் நிகழ்வாகும் என நாம் நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila