பொதுமன்னிப்பு?சுமந்திரனின் ஆலோசனையா?

இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளிற்கும் ஒரே தடவையில் மன்னிப்பு எனும் ஆலோசனையினை கூட்டமைப்பின் முக்கிய புள்ளியே ஒருவரே அரசிற்கு தற்போதைய சூழலில் ஆலோசனையாக முன்வைத்தமை தெரியவந்துள்ளது.


போர்க்குற்றச்சாட்டுக்களிற்குள்ளாகியுள்ள படையினருக்கும் அரசியல் கைதிகளுடன் இணைத்து, பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளில் முன்வைக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த யோசனையை தமிழர் தரப்பு, அடியோடு நிராகரிப்பதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)தெரிவித்துள்ளதுடன், போர்க் குற்ற விசாரணை நடைபெற்று, நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களுடையதும் கூட்டமைப்பினதும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளது.  

அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என். சிறீகாந்தா, ஐ.நாவின் ஜனாதிபதி ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படும் உரை தொடர்பான விமர்சனத்தை முன்வைத்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரியின் இந்த அறிவிப்பு என்பது, போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை விடுவிப்பதுடன், போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு என்ற அடிப்படையில் அவரது யோசனை அமையவுள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது.  

“ஆனால் எங்களுடைய கட்சியும் சரி, நாங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில், முழுமையானதொரு விசாரணை இடம்பெற வேண்டுமென்பதில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம்” என்று, அவர் குறிப்பிட்டார்.  

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான இவ்விடயத்தில், எந்தவொரு சமரத்துக்கும் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவும் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், “இதனை நாங்கள், கூட்டமைப்பின் சார்பிலேயே தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, இதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது தான், தன்மானமுள்ள ஒவ்வவொரு தமிழர் தரப்பினது நிலைப்பாடு என்பது மட்டுமல்ல, கோரிக்கையாகவும் இருக்கின்றது” என்றும் தெரிவித்தார்.   

இந்நிலையிலேயே கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரில் அரசு ஜநாவில் காய்களை நகர்த்திக்கொண்டிருப்பதுடன் படையினரையும் பாதுகாத்;துவருகின்றது.

இதன் முன்னிலையில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுவருகின்ற நிலையில் அதனை மூடிமறைத்து வெள்ளையடிப்பதில் டெலோ அமைப்பு முனைப்பு காட்டிவருகின்றதெனவும் அத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila