![]()
அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் அதிகளவான தமிழர்கள் சித்திபெற்ற காரணத்தினால் குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிமல் ரத்நாயக்க எம்.பியும், சுமந்திரன் எம்.பியும் இன்று பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
|
இதன்போது, போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடங்களின் பின்னர் பரீட்சை மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்துச் செய்வது நியாயமற்றது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஏற்றுக்கொண்டதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
|
நிர்வாகசேவை பரீட்சையில் அதிகளவு தமிழர்கள் சித்தியடைந்ததால் பெறுபேறுகளை ரத்துச் செய்ய சதித் திட்டம்!
Related Post:
Add Comments