இன்று காலை 9.45 மணிக்கு முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும் ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut அவர்களுக்கும் இடையில் 11/2மணித்தியாலங்கள் சந்திப்பு நடைபெற்றது .இதில் மகாவலி தொடர்பாகவும்,தொல்பொருள் ,வனவளம்,வன ஜீவராசிகள் போன்ற திணை க்களங்களின்,அதிகாரசபைகளின் நில அபகரிப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.அவர்கள் இது தொடர்பாக அரசிற்கு அழுத்தம்கொடுப்பதாக உறுதி அளித்தார்கள் .

