வடமாகாணசபை தேர்தல் வருகின்றதோ இல்லையோ ஏட்டிக்குப்போட்டியாக கூட்டங்கள் பிரமுகர்கள் அழைப்புக்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.

கடந்த வடமாகாணசபை தேர்தலில் தன்னை தோற்கடிக்க பாடுபட்ட தனது முன்னைய முதலாளியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவனையும் மாவை,சுமந்திரன் போன்றவர்களையும் அழைத்து ஆதரவாளர்கள் கூட்டமொன்றை நடத்தியுள்ளார்.
தற்போது ஆட்கள் கூட்டங்களிற்கு எட்டிப்பார்த்திராத நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களிற்கான நிகழ்வினை ஆதரவாளர்களின் கூட்டமாக்கி இன்று நடத்திக்காட்டியுள்ளார்.
அதில் புல்லரித்துப்போன சரவணபவன் இனி வடமராட்சி தமிழரசுக்கட்சிக்கேயென புல்லரித்துப்போயுள்ளார்.
இந்நிலையில் ஏட்டிக்கு போட்டியாக முதலமைச்சரினை அழைத்து பருத்தித்துறை இளைஞர்கள் கௌரவித்துள்ளனர்.பருத்தித்துறையின் புகழ்பூத்த ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் புதிய மைதானமொன்று இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் வரும் வரை காத்திருப்பதாக தெரிவித்து காத்திருந்து மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.