சாவகச்சேரி வெள்ளை வான் கடத்தல், தாயார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெள்ளை வானில் வந்தோரினால் தனது மகன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞனின் தயார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் மேற்கு வேதாந்தமடம் என்னுமிடத்தில் வைத்து பொலிஸார் என அடையாளப்படுத்தியவர்களினால் தனது 31 வயதான இராசதுரை ஜெயந்தன் என்பவர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது தாயார் இராசதுரை தயாநிதி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தனது மகன் இராசதுரை ஜெயந்தனுடைய பெயரைக் கூறி அழைத்து வீட்டினுள் வந்து விசாரணை செய்து வீட்டினை சோதனை செய்தனர். பின்னர் எனது மகனின் கைகளில் விலகிட்டு, தாங்கள் பொலிஸார் என்றும் சிவில் உடையில் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் கூறி மகனை வெள்ளை வானில் கொண்டுச் சென்றனர்.’ என்றும் தாயார் கூறினார்.
Related Post:
Add Comments