
இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை பகுதி யிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஒழுங்க மைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணைப் பிரி வினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வு ஒன்றில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளாா்.
விஜயகலா மகேஸ்வரனின் உரை தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்ப டுத்தியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி ஆகியன விஜயகலா மகேஸ்வரனின் இராஜாங்க அமைச்சு பத வியை பறிக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக விசாரணை களை மேற்கொண்டிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள விஜயகலா மகேஸ்வரனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.