வயல்வெளியைத் துப்பரவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 06 முஸ்லிம்களும் 11 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டமடு பிரதேசம், நீண்ட காலமாக மேய்ச்சத் தரையா அல்லது வேளாண்மை செய்யும் காணியா என பெரும் சர்ச்சை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
