
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் வன்னி பெருநிலப்பரப்பு வெள்ளக்காடாக மாறியுள்ளது. சுமர் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான உதவிப் பணிகளில் சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று தனது இளைஞரணிக்கான மாநாடு ஒன்றினை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கிறது. குறித்த மாநாட்டின்போது தமிழரசுக் கட்சி இளைஞர்கள் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு பிரதேச ரீதியான தலைமைகளைத் தெரிவு செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக தெரியவந்துள்ளது.