மகிந்தவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி இல்லை!

தேர்தலில் தோல்வி அடைவோம் என நினைப்பவர்கள் தான் தேர்தலினை எதிர்க்கின்றனர்: மஹிந்தமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க் கட்சித் தலைவராக செயற்படுவது சட்ட விரோதமான செயல் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து சம கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,
மகிந்த ராஜபக்சவும் ஆளும் கட்சியின் பங்காளர். எனவே அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். ஆகவே மகிந்தவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என்றார்.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு பின்னரே பொது தேர்தல் இடம்பெரும். அதுவரையில் பொது தேர்தலை நடத்தப்போவதுமில்லை. ஆனால் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுவருகின்றது.
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விபரங்கள் தொடர்பாக பேசிய மரிக்கார்,
அரச சொத்துக்களை திருடியவர்களுக்கு கட்டாயமாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இழஞ்ச ஊழல் மோசடி தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய கட்சியும் இந்த பிரச்சினைகளை திர்த்துக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகும்.
பிணைமுறி விவகாரம் கடந்த 2007 அண்டு முதல் இடம்பெற்றுவந்தள்ளது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிடப்பட வேண்டும். யார் ஊழல் செய்தாலும் குற்றம் குற்றமாகவே கருதப்படும் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila