மன்னார் புதைகுழியில் உள்ள எச்சங்களை ஆய்வு செய்யும் முயற்சிகள் தொடரும் – சாலிய பீரிஸ்

மன்னாரில் பெரும் மனித புதைகுழிகளிலுள்ள எச்சங்களை அய்வு செய்வதற்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உதவும் என அவ் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையை நிலைநிறுத்துவதிலும் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சூழ்நிலைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கேற்பட்ட கதியையும் காண்பதில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அர்ப்பணிப்பு தொடர்கிறது.

மன்னார் பாரிய புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எச்சங்களை புலனாய்வு செய்வதற்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உதவுவது தவிர்க்க முடியாததாகும்.

மேலும் அவர் 2018 ஆடி மாதம் முதல் காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அகழ் வாராய்ச்சி குழுவினரது உணவு, தங்குமிட வசதி ஆகியவற்றிற்கான நிதியை தந்துதவியது.

அத்தோடு புதைகுழிக்கு மேலாக தார்ப்பாய் துணி விரித்து அந்நிலம் பருவகால மழையினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்பணிகளில் உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்தி புலனாய்வு முன்னெடுப்பில் பொதுமக்கள் நம்பிக்கையை நிச்சயப்படுத்திக் கொள்ளும் அவசியத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து வலியுறுத்தியதாகவும்” கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila