சிறுபான்மை கட்சிகள் ஓரம் கட்டப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல் முறைமயில் மாற்றம் செய்வது தொடர்பிலான செய்பாடுகளின் போது சிறுபான்மை கட்சிகள் ஓரம் கட்டப்படுவதாக தெரிவித்துள்ளது.
சிறுபான்மை கட்சிகளிடம் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கருத்துக்கள் கோரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு முறைமையிலேயே தேர்தல் நடத்தப்படும் என கருதியதாகவும், அமைச்சரவை தீர்மானம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடுகளை கேட்டறிய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கு விரும்பியவாறு இவ்வாறு தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து தமக்கும் அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.