வட மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை த.தே.கூ.வலியுறுத்து


கொழும்பில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் பேசுபவர்கள் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி திறப்பு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த அரசியல்வாதிகளின் தலைமையின் கீழ் வேலை பெற்றிருந்தாலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் என்றும் மக்கள் சேவகர்களாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்கு கடமையுடையவர்கள் அரசாங்கம் சொல்பவற்றை செய்ய வேண்டியவர்கள்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒரு கட்சிக்கு வேலை செய்பவர்கள் அல்லர். ஆனாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நாளாந்தம் கட்சிக்குத்தான் வேலை செய்வதனை நான் பார்த்திருக்கின்றேன். அதனை விடுத்து மக்களுக்கு சேவையாற்ற முயலுங்கள். யார் இந்த பதவியை உங்களுக்கு தந்திருந்தாலும் மக்களின் வரிப்பணத்திலேயே உங்களிற்கு சம்பளம் தரப்படுகின்றது.

ஆகவே அந்த வரிப்பணத்திற்கு நீங்கள் துரோகம் செய்வதென்பது தமிழ் மக்களிற்கு செய்யும் துரோகமாகும். ஆகவே இனிமேலாவது உத்தியோகத்தர்கள் தமது வேலையை மாத்திரம் நீதியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

கொழும்பில் தினம் தினம் ஊழல் தொடர்பான செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது ஊழல் தொடர்பில் பேசப்படுகின்றது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல்கள் தொடர்பில் யார் பேசுவது?ஆகவே தமிழ் மக்கள் மாத்திரம் ஊழல்களை ஏற்றுக்கொள்ள முடியுமா? தமிழ் மக்களுக்கு இது தலை விதியா? தமிழ் மக்களுக்கென ஒரு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா? இங்கு வருபவர்கள் எல்லோரும் தமிழ்மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க முடியுமா? இவையெல்லாம் நடக்க விடக்கூடாது.

நாங்கள் புதிய அரசாங்க அதிபரை கேட்டுக்கொள்ளும் ஒரேயொரு விடயம், யாழில் பல இடங்களில் பல விதத்தில் கடந்த காலங்களில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.அவற்றை சீர் செய்ய வேண்டும். உங்களின் நிர்வாகங்களில் இவ்வாறான ஊழல்கள் இடம் பெறக் கூடாது.

நாங்கள் நல்லாட்சியை கொழு ம்பில் எவ்வாறு எதிர்பார்கின் றோமோ? வடக்கு மாகாணத்தில் எவ்வாறு வடக்கு மாகாணசபையிடம் நல்லாட்சியை எதிர்பார்கின்றோமோ? அவற்றோடு வினைத்திறன் மிக்கதான அரசாட்சியையும் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila