இன்றைய தினமான புதன்கிழமை தமிழ்மக்கள் பேரவையின் சார்பில் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் அலன் சத்தியதாஸ் மற்றும் பேரவை உறுப்பினர் திருமதி மேரி தயாளினி உதயராஜ் ஆகியோர் திருகோணமலை மாவட்ட ஆயர் மேதகு நோயல் இம்மானுவேல் ஆண்டகையைச் சந்தித்து தமிழ்மக்கள் பேரவையின் செயற்பாடுகள் பற்றி விளக்கிக்கூறியிருந்தனர்.
இதன்போது தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு தமிழ்மக்களுக்கு மிகவும் அவசியமானது எனக்கூறிய ஆயர் , பேரவைக்கு தனது ஆதரவும் ஆசியும் என்றும் இருக்குமெனக் குறிப்பிட்டதுடன் திருகோணமலை மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் பேரவையில் அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆயரின் கோரிக்கை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமென பேரவையின் பிரதிநிதிகள் ஆயரிடம் உறுதியளித்தனர்.
இதேவேளை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் , மட்டக்களப்பு மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரும் தமிழ்மக்கள் பேரவையை வரவேற்று தமது ஆதரவைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.