நேற்றைய தினம் நம் தூரத்து உறவுக்காரத்தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரு க்கு இப்போது வயது 90. எனினும் நாட்டு நடப்புக்களை அவதானிப்பதிலும் அவை தொடர்பில் விமர்சனம் செய்வதிலும் அவர் ஒருபோதும் தளர்ந்தாரில்லை.
அவரது வீட்டில் போய் இருந்ததும் வா ராசா எப்படிச் சுகமாக இருக்கிறியோ என்றார். நான் மெளனத்தைக் கடைப்பிடித்தேன்.
அது சரி அரிசி 120 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், போதாக்குறைக்கு மருந்தடித்த மரக் கறி, ஐஸ்மீன் இனி எங்க எங்களுக்குச் சுகம்வரப் போகுது.
போதாக்குறைக்கு டெங்கு நோய் வாழ வேண்டிய பிள்ளைகளைப் பலி எடுக்குது. இப் படிக்கூறியபடிதன் தோளில் கிடந்த சால்வையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டபடி அறைக்குள் சென்றார். ஒரு கடதாசியை எடு த்து வந்து இதை ஒருக்கா வாசி தம்பி என்று தந்தார்.
அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது. என் அன் புக்குரிய தம்பி சம்பந்தருக்கு வணக்கம். உங்கள் நலம் வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். என் நலம் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. 90 வயது, காலன் அடிக்கடி என்னை நெருங்கப் பார்க்கிறான். இரவல் தந்தவன் அல்லவோ, எப்ப வீட்டை விட்டு வரப் போறியள் என்பது போல அவனின் பார்வை இருக்கிறது.
இருந்தும் எங்கட தமிழ் மண்ணுக்கு ஒரு விடிவைக் கண்டிட்டு போனால் இந்த ஆத்மா சாந்தியடையும் என்பதால் கொஞ்சம் பொறுத் துக் கொள்ளுங்கள். இந்தத் தீபாவளிக்குப் பிறகு நான் றெடி என்று கடவுளிடம் கூறினேன்.
இப்படிக் கூறியதற்கு ஒரு காரணம் உண்டு. கடந்த தீபாவளியின்போது அடுத்த தீபாவளிக் குள் (2017) எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும். அடுத்த தீபாவளியை நாங்கள் எல்லோ ரும் மகிழ்வாகக் கொண்டாடுவோம் என்று தாங்கள் கூறியதுதான்.
2016ஆம் ஆண்டு தீபாவளியின்போது 2017ஆம் ஆண்டு தீபாவளியில் நாம் அனை வரும் மகிழ்வாக, சுதந்திரமாக இருப்போம் என்று நீங்கள் கூறியதை நம்பித்தான் கடவுளி டம் அப்படியயாரு உறுதிமொழியைக் கூறினேன்.
இருந்தும் நேற்று முன்தினம் 15ஆம் திகதி நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். அடுத்த தீபாவளியின் போது (2018) நாங்கள் எல்லோ ரும் மகிழ்வாக இருப்போம் என்று கூறியிருந் தீர்கள்.
2016ஆம் ஆண்டில் கூறியதை 2017இலும் கூறியபோது நான் அதிர்ந்து போனேன். இன்று போய் நாளை வா என்ற கதைதான் இது என்ப தைப் புரிந்து கொண்டேன்.
ஏதோ உங்கள் அரசியல் பிழைப்பு நடக்கட் டும். இனி என்னால ஏலாது மகன். 2018 தீபா வளிக்கு நான் இருக்க மாட்டேன். 2018 இல 2019ஆம் ஆண்டில் மகிழ்வாக இருப்போம் என்று கூசாமல் சொல்லுவியள்.
ஏதோ! யான் வெளிக்கிட்டிடுவன். நல்ல செய்தி ஏதும் நடந்தால் நல்லது. உங்களிட்ட இரு ந்து தமிழ் மக்களை கடவுள் காப்பாற்றட்டும்.
இப்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.