ஏற்கனவே கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் முனையத்தை சீன நிறுவனம் நிர்மாணித்து அதனை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்ற சூழலிலும், கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்க 1.5 பில்லியன் டொலர் திட்டத்தை சீனா பொறுப்பேற்றுள்ள சூழலிலும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் மீது இந்தியாவின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஆயுதப் போட்டியை விட வணிகப் போட்டியே முதன்மை பெற்றுள்ள நவீன யுகத்தில், துறைமுகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே மிகப்பெரிய நாடுகளின் கனவாக மாறியிருக்கிறது.
அதிலும் சீனா, ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள பல துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கில் வைத்திருப்பதற்கான முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டிருக்கின்றது.
மியான்மார், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான், கென்யா, நமீபியா உள்ளிட்ட பல நாடுகளில் சீனா துறைமுக அபிவிருத்தி திட்டங்களில் பெரியளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது.
அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை சீனா நிர்மாணித்துக் கொடுத்துள்ள போதிலும், அதற்கு ஏற்பட்ட செலவுக்கான வட்டியைச் செலுத்தும் அளவுக்கு அதில் வருமானம் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இதனால் அந்த துறைமுகத்தை கப்பல்களை பழுதுபார்க்கும், கப்பல்களைக் கட்டும் தளமாக நிர்மாணிக்க சீனா உதவ வேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் கோரியிருக்கிறது.
சீனாவை விட்டு விலகி நிற்க முயன்றாலும், மீண்டும் மீண்டும் அதனிடம் சரணாகதியடையும் நிலையையே இது ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு கட்டத்தில் துறைமுகத்தை நிர்வகிக்கவும் முடியாமல் வட்டியையும் கட்ட முடியாமல் சீனாவிடம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ஒப்படைத்து விடலாம் என்று கூட அரசாங்கம் யோசிக்கலாம்.
இதுபோலத்தான் குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா அபிவிருத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது.
அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது மட்டுமன்றி அரபிக் கடலுக்கும் தனது தென்மேற்கு மாகாணத்துக்கும் இடையில் தரைவழித் தொடர்பையும் ஏற்படுத்துகிறது சீனா.
சீனா குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் இந்தத் துறைமுகத்தைப் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தாலும் அதனை நிர்வகிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரு கட்டத்தில் இயல்பாகவே அந்தத் துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு பாகிஸ்தான் வரக்கூடும்.
பழங்காலத் துறைமுகங்களை ஆனால் அதிக வணிக வாய்ப்பற்ற துறைமுகங்களைத்தான் சீனா தனது திட்டங்களுக்காகத் தேர்வு செய்கிறது என்பதற்கு அம்பாந்தோட்டையும், குவடாரும் தக்க சான்றுகளாகும். ஆனால் கொழும்புத் துறைமுகம் அவ்வாறானதல்ல. தெற்காசியாவில் மிகவும் சுறுசுறுப்பான பரபரப்பான துறைமுகங்களில் ஒன்று.
கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி அதனை விரிவுபடுத்தும் திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்ட போது சீனா கொழும்பு தெற்கு கொள்கலன் முனையத்தை தனது செலவில் நிர்மாணித்து அதனை 35 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டது.
இந்த முனையத்தில் 85 வீதம் சீனாவின் முதலீடு. 15 வீத உரிமை மட்டுந்தான் துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்கு உள்ளது.
இந்தக் கொள்கலன் முனையத்தின் ஒரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலேயே 35 ஆண்டுகளுக்கு இருக்கும்.
இங்கு தான் கடந்த ஆண்டு செப்டம்பரிலும், டிசம்பரிலும் சீன நீர்மூழ்கிகள் தரித்து நின்றன.
அந்த விவகாரம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இன்னமும் கூட பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு அரங்குகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இரகுக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் இப்போது கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்திய நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கும் முயற்சியில் இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டிய கட்டாயம் மட்டும் அதற்கு இல்லை.
அதற்கும் அப்பால் கொழும்புத் துறைமுகம் வழியாக கையாளப்படும் 70 வீதமான கொள்கலன்கள் இந்தியக் கப்பல்கள் மூலம் வருபவைதான்.
எனவே தான் கப்பல் போக்குவரத்து வணிகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு கொழும்புத் துறைமுகத்தின் கட்டுப்பாடு சீனாவின் கையில் சென்றுவிடக்கூடாது என்பதில் புதுடில்லி ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை.
330 மில்லியன் டொலர்கள் செலவில் கிழக்கு கொள்கலன் முனையத்தை அமைக்கும் பணி ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 1200 மீற்றர் நீளமான இந்தக் கொள்கலன் முனையத்தின் 400 மீற்றர் பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்து செயற்பாட்டுக்கும் வந்துவிட்டது.
இந்த முனையத்தை செயற்படுத்தும் பொறுப்பை இந்தியா பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இதனை நேரடியாகச் செய்யப் போவதில்லை.
சீனா எப்படி தனது அரசுத்துறை நிறுவனங்களை, இலங்கையில் துறைமுகங்கள் மற்றும் திட்டங்களில் ஈடுபடுத்தியதோ அதுபோலவே இந்தியாவும், தனது அரசுத்துறை நிறுவனங்களை கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே ஈரானில் இந்தியா இதுபோன்றதொரு திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஈரானின் சபஹார் துறைமுகத்தில் பலநோக்கு சரக்கு முனையம், கொள்கலன் முனையம் ஆகியவற்றை அமைக்க 85 மில்லியன் டொலரை முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஜவகர்லால் நேரு துறைமுக நிதியம், கண்ட்லா துறைமுக நிதியம் ஆகிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் மூலம் இந்தப் பணிகளில் ஈடுபட இந்தியா முனைகிறது.
இதுபோன்று கொழும்புத் துறைமுகத்திலும் கிழக்கு கொன்கலன் முனையத்தில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்த இந்தியா முனைகிறது.
கேந்திர முக்கியத்துவம் மற்றும் இதன் மீது உள்ள இந்தியாவின் நலன்கள், சீனாவைச் சமாளிக்க வேண்டிய சூழல் என்பன, கொழும்புத் துறைமுகத்தின் மீது இந்தியா கூடுதலான பிடிமானத்தை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சீனா தொடங்கிய போது அதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டது.
ஆனால் ராஜபக்ச அரசாங்கம் அதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
புதிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ள போதிலும் இந்தியாவுக்குச் சாதகமான முறையில் திட்டத்தில் மாற்றங்களைச் செய்யவுள்ளது.
குறிப்பாக 20 ஹெக்டயர் நிலப்பகுதியை சீனாவுக்கு உரிமையாக வழங்கும் விதிமுறை, வான் எல்லை உள்ளிட்ட விடயங்கள் புதிய திட்ட உடன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருக்கிறார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சீனா தொடர்வது இந்தியாவுக்கு விருப்பமில்லாத விடயமாக இருந்தாலும், சீனாவுடனான உறவுகளை முறித்துக் கொள்ள இலங்கை தயாராக இல்லை.
இந்தநிலையில் தான் இந்தியாவையும் திருப்திப்படுத்தும் வகையில், சீனாவையும் பகைத்துக் கொள்ளாத வகையில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க இலங்கை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எப்படியோ புதிய அரசாங்கம் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவுள்ள நிலையில், அங்கு கால் பதிக்கும் சீனாவுக்குப் போட்டியாக கொழும்புத் துறைமுகத்தில் தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் தெற்கு கொள்கலன் முனையத்துடன் போட்டி போடும் வகையில் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும்.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டி, தமக்கு கூடுதல் வருமானத்தைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கிறது இலங்கை. வர்த்தப் போட்டியாக இருக்கும் வரைக்கும் இது இலங்கைக்கு அனுகூலமான விடயமாகவே இருக்கும்.
இராணுவ ஆதிக்கப் போட்டியாக மாறினால், அது இலங்கைக்கே பேராபத்தை விளைவிக்கும்.
ஹரிகரன்