போர்க்குற்றங்களுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் யாழில் இன்று கையயழுத்துப் போராட்டம்

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு  இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையைப் பொறுப்பேற்கக் கோரும் கையொப்பப் போராட்டம் இன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன் பாக ஆரம்பமாகிறது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிதேடும் போராட்டத்துக்கு
 அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையி னால் 2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 30ஃ01 தீர்மானமானது - பாதிக்கப்பட்ட மக்க ளின் கோரிக்கைகளைக் கருத்திற்கொள் ளாது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழான ஒரு உள்ளகவிசாரணைப் பொறிமு றையினை நிறுவி இத் தீர்மானத்தை இல ங்கை அரசு தனது சுயவிருப்பில் ஏற்றுக்கொ ண்டிருந்தது.  

நீதியான பொறுப்புக்கூறல் விடயத்தில்  அத் தீர்மானத்தில் மிகப்பாரிய குறைபாடுகள் இருந்தமையால்  பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருக்க வில்லை. ஆயினும் இலங்கை அரசு அத் தீர்மானத்தில் உத்தியோகபூர்வமாக கைச் சாத்திட்டிருந்தது. 

இருப்பினும்இலங்கையில்; இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வ தேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர் பாக ஐ.நா.மனித உரிமை பேரவை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றிய 30ஃ01 தீர்மான த்தில் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப் பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகியு ள்ளதோடு ஐ.நாவின் தீர்மானத்தையும் உதாசீனம் செய்துள்ளது. 

இத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்ட பின்னரும் இலங்கை ஜனாதிபதி உட்பட அரச உயர்பீடத்தினர் இத் தீர்மானத்தின் கடப்பாடுகளை வெளிப்படை யாகவே நிராகரித்திருந்தனர். தமிழ் மக்க ளின் நோக்கில் இத் தீர்மானம் பலவீனமாக இருந்தும்கூட இத்தீர்மானத்தில் கைச்சாத் திட்டமைக்காக அப்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். 

இதன் தொடர்ச்சியாக 2017 மார்ச் மாதம் மேலதிகமாக வழங்கப்பட்ட இரண்டு வருட காலஅவகாசத்தின் முதல் அரைப்பகுதியில் இலங்கை அரசு பொறுப்புக்கூறல் உட்பட தீர் மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு அம்ச த்தையும் நிறைவேற்றவில்லை என்பதுடன் பொறுப்புக் கூறலை ஒருபொழுதும் மேற்கொ ள்ளப்போவதில்லை என்பதனை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற சித்திரவதை கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகத் தொடரும் குற்றச்சாட்டுக்கள், காணிகள் விடுவிக்கப்ப டாமை, மீள்குடியேற அனுமதிக்கப்படாமை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காமை, அச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்படாமை, வலிந்து காணாமல் ஆக்க ப்பட்டோரின் உறவினருக்கான பொறுப்புக் கூறல்கள் போன்றவற்றில் இலங்கை அரசு தொடர்ச்சியாக உதாசீனம் செய்து வருகின்றது.

அத்தோடு இலங்கையின் வடக்கு கிழக் கில் இராணுவமயமாக்கல் தொடர்வதும் அதன் விளைவாக தொடர்ச்சியாக கடுமை யான இராணுவக்கண்காணிப்பு நிலவுவதும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை சவாலுக் குள்ளாக்குவதோடு எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் அர்த்தமற்றதாக்குகின்றது. 

தமிழினத்துக்கு விரோதமான பாரிய இன அழிப்புக்கு பின்னர் தொடர்ச்சியாகப் பத விக்கு வந்த அரசாங்கங்களும் உள்ளகரீதி யான விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பத்தினைக் கூட குறைந்தபட் சமேனும் கொண்டிருக்கவில்லை என்பது தற்போது வெளிப்படையாகியிருக்கிறது. தன் னால் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங் களை அமுல்படுத்தக்கூடிய அதிகாரம் துர திஷ்டவசமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் இல்லை.

இந்நிலையில் - இலங்கையில் இடம்பெ ற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப் புக்கூறுவதற்கு உறுதிப்படுத்துவதற்காக அதன்மீது சர்வதேச சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலான தெரிவுகள் மற்றும் மாற்றுவழிகளை ஆராயவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் பேரவையின் ஆணையாளர் சைட் அல் øசைனும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.மனித உரிமை பேரவை சர்வ தேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக ளில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்ப தற்கு அதிகாரமற்ற சபை என்பதாலேயே இல ங்கை அரசாங்கமானது தொடர்ச்சியாக அச மந்தப்போக்கினைக் கடைப்பிடிக்கின்றது. 
எனவே இலங்கை அரசாங்கத்திற்கு 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தில் எஞ்சியுள்ள ஒரு வருடத்தை தொடர்ந்தும் வழங்கி காலத்தை வீணடிக்காது இலங்கை விவகாரம் தொட ர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப் பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபை நிறைவேற்ற வேண் டும் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் கோருகின்றோம். 

இதனை வலியுறுத்தும் வகையில் சர்வ தேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு மேற்படிக் கோரி க்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை வழங்குமாறு சர்வ தேச சமூகத்தை கோரும் கையழுத்துப் போராட்டத்தினைத் தமிழர் தாயகமெங்கும் நடத்தவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணி க்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக  ஆரம்பமாகவுள்ளது. 
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிதே டும் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பின ரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila