ஜனாதிபதியுடனான நாளைய சந்திப்புக்கு வடக்கு முதலமைச்சருக்கு அழைப்பில்லை
2016 வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண முதலமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ள அதேநேரம் இதற்கான அழைப்பு தனக்கு வரவில்லையென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இசுறு தேவப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Add Comments