வடமாகாண முதலமைச்சர் நிதியத்தை செயற்படவிடாது தடுத்துவரும் இலங்கை அரசு இம்மாத இறுதியினுள் அப்பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவொன்றை தரவேண்டும்.
அவ்வாறு தர தவறினால் மக்களை அணி திரட்டி ஆளுநர் அலுவலகம் பேரவைச்செயலகம்,பிரதம செயலாளர் செயலகம்,மற்றும் மாவட்ட செயலகங்கள் என்பவை முடக்கப்படுமென அறிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வறிவிப்பினை விடுத்திருந்தார்.
வடமாகாணசபையினை தெரிவுசெய்த பின்னர் மக்கள் பெரியதொரு நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.ஆனால் நாம் செய்தது யானைப்பசிக்கு சோளப்பொரி போட்ட கதைதான்.
இந்நிலையினில் முதலமைச்சர் நிதியத்தை செயற்படுத்தி புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து ஏதேனும் செய்வோம் என முற்பட்டால் ஆளுநர் ஒருபுறம்,சட்டமா அதிபர் திணைக்களமென கடந்த மூன்றுவருடங்களாக இழுத்தடிக்கின்றனர்.மத்திய வங்கி,கணக்காய்வாளர் நாயகமென அனைத்து தரப்புக்களதும் கண்காணிப்பினில் முதலமைச்சர் நிதியத்தை இயக்குவோமென தெரிவித்தாலும் அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
இந்நிலையினில் இம்மாத இறுதிவரை அரசிற்கு கால அவகாசமொன்றை வழங்கவிரும்புகின்றோம்.எதிர்வரும் 31ம் திகதியினுள் முதலமைச்சர் நிதியத்தை சுமூகமாக இயங்க அனுமதிக்காவிட்டால் ஆயிரக்கணக்கினில் மக்களை அணி திரட்டி ஆளுநர் அலுவலகம் பேரவைச்செயலகம்,பிரதம செயலாளர் செயலகம்,மற்றும் மாவட்ட செயலகங்கள் என்பவை முடக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு இறுதி யுத்தம் வரை அழித்த எமது சொத்து ஒரு இலட்சம் கோடிக்கு மேற்பட்டது.அதில் மூன்று சதவீதத்தை கூட எமது மக்களிற்கு இலங்கை அரசு மீளளித்திருக்கவில்லை.எமது மக்களிற்கு ஒன்றையுமே செய்யவிடாத இலங்கை அரசு மறுபுறம் எம்மை ஒன்றையும் செய்யவிடுகின்றதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் அனைத்து மாகாணசபைகளிலும் முதலமைச்சர் நிதியத்தை செயற்படவிடுத்துள்ள இலங்கை அரசு வடமாகாணசபைக்கு மட்டும் முட்டுக்கட்டையினை போட்டுவருவதுடன் ஆளுநர் நிதியமொன்றை உருவாக்கி நிர்வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
Add Comments