இன நல்லிணக்கம் பேசிக்கொ ள்ளும் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு மாகாண சபை மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கள் எதிர்க்கும் வீட்டு திட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என துடிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியை மத்திய மீள்குடியேற்ற அமைச்சு கைவிட வேண்டும் என வும் தெரிவித்துள்ளார்.
கோப்பாயில் அமைக்கப்பட்டு வரும் அறுபத்தி ஐயாயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தனது சுய விருப்பு வெறுப்புகளுக்காக, தனக்கு கிடைக்கும் நன்மைகளுக்காக தமிழ் மக்களை அடகு வைத்து வழங்கும் ஒரு வீட்டு திட்டத்தை அமைக்க அவர் முன்வரக்கூடாது. தமிழர்கள் ஏற்கனவே மூன்றேகால் இலடசத்துக்கு நேர்ப் வீட்டு திட்டத்தினையும், செஞ்சுலுவை சங்கத்தின் இந்திய வீட்டு திட்டத்தையும் ஐந்தேகால் இலட்சத்துக்கும் கட்டி அனுபவப்பட்டவர்கள்.
இதனை விட எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான் ஐரோப்பிய வீட்டு திட்டத்தையும் கட்ட தயாராக உள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வடக்கு கிழக்கில் வீடற்று உள்ளார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு இல்லாமல் இருக்கும் போது, இருபத்தி ஒரு இலட்சத்தில் ஒரு பொருத்து வீடு என்று அடையாளம் காட்டி,
அவர்களுக்கு அற்ப ஆசை காட்டி, தொலைக்காட்சி தரலாம், வைபை தரலாம், என்றெல்லாம் அவர்களை ஏமாற்றி, அவர்களுடைய நிரந்தர வாழ்வில் ஒரு பங்கம் ஏற்படும் வகையில் அமைச்சர் சுவாமிநாதன் செயற்பட கூடாது. ஆகவே இது தமிழ் மக்கள் தங்கள் வீட்டுக்கு பத்து இலட்சம் ரூபா வழங்கினால் போதுமானது, அவர்கள் தங்களது வீடுகளை தாராளமாக கட்டி கொள்வார்கள்.
இரணைமடு குளம் திருத்தம் காரணமாக எத்தனையோ விவசாயிகள் வேலை இல்லாமல் இருநூற்றி ஐம்பது கோடி நஷ்டத்தினை எதிர்நோக்கி உள்ளார்கள். கண்ணகி நகரில் ஆயிரத்து முன்னூறு குடும்பங்கள் இரணைமடு குளத்து தண்ணீரினை குடிப்பதற்காக திறந்து விடப்பட்டமையால், அந்த பகுதில் உள்ள ஆயிரக்கணக்கான இறால் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் தொழிலில் ஈடுபட முடியாதவாறும் வருமானமும் இல்லாமல்,
வீடுகளில் இருக்கின்றார்கள் இந்த வீட்டு திட்டம் உடனடியாக வழங்கப்பட்டால் அவர்கள் எல்லாவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆகவே மக்களுடைய வாழ் வாதரத்தினையும் கருத்திற் கொண்டும், சூழலினையும் கருத்திற் கொண்டும், அரசாங்கம் வீட்டினை அமைக்க வேண்டுமே ஒழிய,
அரசாங்கம் நினைக்கும் வீட்டினை மக்களுக்கு தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக திணிக்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை உள்ளது. அதற்கு ஒரு முதலமைச்சர் அமைச்சர்கள், உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது கருத்துக்களை புறக்கணித்து விட்டு, மத்திய அரசில் இருக்கும் தாங்கள் ஒரு கொள்கையை வகுத்து கொண்டு,
அந்த கொள்கையின் அடிப்படையில் பத்திரிகைகளில் விளம்பரம் கோரி மக்களை குழப்புகின்ற நடவடிக்கைகளை அமைச்சர் சுவாமிநாதன் கைவிட வேண்டும். அவர் அமைச்சர் என்பதற்காக தான்தோன்றி தனமாக செயற்பட முடியாது. நல்லாட்சி பற்றி தமிழ் மக்கள் நல்ல வகையில் சிந்திக்க வேண்டும் என்றால் இதனை கைவிட வேண்டும்.
நல்லாட்சி அரசில் அமைச்சர் சுவாமிநாதனுக்கு இந்த பதவி கிடைப்பதற்கு தமிழர்களும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தான் காரணம். நல்லாட்சி அரசில் அங்கம் வகித்து கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசும் தமிழ் அமைச்சர்கள் இதனை சிந்திக்க வேண்டும். ஆகாவே இந்த வீட்டு திட்டம் பற்றி சிறந்த திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். என்றார் சிவஞானம் சிறிதரன்.