யாழ்பாணத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சமூகவிரோத குற்றச்செயல்களுக்கு மத்தியில் பெண்கள் மீதான அநாகரிகமான செயற்பாடுகளும் அதிகரித்தவாறே செல்கின்றது. இவ்வாறான சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ். நகரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை தனியார் கல்வி நிலையத்தில் கல்விகற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவருடன் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி மற்றும் மனோகரா சந்திக்கு இடையில் பள்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மிகவும்; தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள், அவர்களை மடக்கிபிடிக்க முற்பட்ட போதிலும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக சமூக விரோதசெயல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ள நிலையில் பெண்கள் மீதான இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளால் பகல் வேளையிலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டதுடன் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவரும் தேவா மற்றும் சன்னா ஆகியோருடன் தொடர்புடைவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் ஐவரும், பண்டத்தரிப்பு தெல்லிப்பளை மற்றும் ஏழாலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் யாழ்ப்பாணம், சுன்னாகம் புத்தூர் பகுதிகளில் உள்ள பிரபல பாடசாலை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழில் அதிகரிக்கும் பெண்கள் மீதான அநாகரிகமான செயற்பாடுகள்

Related Post:
Add Comments