இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெறும் யுத்தங்கள் குறித்தும்,தமிழ் மக்களை பாகுப்படுத்தியே இந்த யுத்தம் இடம் பெற்றது என்பதையும் புரிந்துக் கொள்ள சர்வதேச சங்கம் தவறியுள்ளது என அனுராதா மிட்டல் குறிப்பிட்டுள்ளார்.
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் சான் ராஜ்குமாருடன் உரையாடும் போதே மிட்டல் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு நியாயம் மற்றும் நல்லிணக்கம் வேண்டுமாயின் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
இலங்கையின் அரசியல் ஆட்சி முறைகள் மாறிவிட்டன ஆனால் எந்த கொள்கைகளும் மாறவில்லை என மிட்டல் தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்களவர்களே தற்போது ஆட்சி அமைத்துள்ளனர்.தமிழர்களை சிறுபான்மையினர் என புறந்தள்ளுகின்றனர். இந்த நிலை இன்னும் மாறவில்லை என அனுராதா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மகிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சியின் போது 2015 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கில் இடம் பெற்ற விசாரணைகள் தொடர்பான தன் அனுபவத்தையும் அனுராதா இந்த உரையாடலின் போது பகிர்ந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.