இன்று சாவகச்சேரியில் நடைபெற்ற மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைத் திறப்பு விழாவில் மாவையின் செயலால் அவர் சகோதரி அதிருப்தி அடைந்து கதறியுள்ளார்.
மாமனிதரின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற மாவை சேனாதிராஜா பாதணியைக் கழற்றாமல் மாலை அணிவித்துள்ளார். இதை அவதானித்த அவரது சகோதரி ‘அண்ணை செருப்போடு மாலை அணிவித்து உன்னை அவமதித்துவிட்டார்கள்’ என்று ஒப்பாரி வைத்து அழுததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவெளை அங்கு நின்ற இளைஞன் ஒருவர் மாவையின் செயலால் ஆத்திரமடைந்து மாவையைத் திட்டியதுடன், சுமந்திரன் மற்றும் சரவணபவனின் செயற்பாடுகளை விமர்சித்ததால் அங்கு சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.