கூட்டமைப்பின் தலைமை மீது விக்கியின் கோபம் ஏன்-மீள்பார்வை ( காணொளி இணைப்பு)

ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு மீண்டும் ராஜதந்திரம் என்ற போர்வையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக எடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் முன்னர் குறிப்பிட்ட ஒரு நேர்காணலை உங்களுக்காக இணைத்துள்ளோம்.

“நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்” 

எனச் சொல்வதன் ஊடாக அவ்வாறானவர்கள் தன்னால் இதுவரை இனங்காணமுடியவில்லை என்பதை மறைமுகமாக கோடிட்டு காட்டுகிறார்.

முக்கியமான விடயமொன்னை சுட்டிக்காட்டும் முதல்வர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்காளிகள் ஆவது பற்றி மேடைகளில் முழக்கமிடும் வேளையில் “அரசியல் ரீதியான ஒரு நிரந்தரத் தீர்வு எமக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து” என்று முதல்வர் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதும் அமைச்சுப்பதவிக் கனவில் இருக்கும் சுமந்திரன் போன்ற சிலரை ரொம்பவே ‘அப்செற்’ ஆக்கியுள்ளதாம்.

இந்த முதல்வரின் எண்ணம் உண்மையில் தேர்தலை ஒட்டி வந்த மாற்றமா? இல்லை நீண்ட அவதானிப்பின் பின்னர் அவர் எடுத்த முடிவே இது இதனை அவர் இனஅழிப்பு தீர்மானம் நிறைவேற்றியதிலிருந்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறார். அத்தோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் வழங்கிய ஒரு நேர்காணலும் நேயர்களுக்காக இணைக்கப்படுகின்றது.(இறுதிப்பகுதியில் காணலாம்)
அண்மைகாரணங்கள் இதுவானபோதும் கடந்தகாலங்களிலும் முதல்வர் நிறைவேற்ற இருந்த இனவழிப்பு தீர்மானத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் இவ்வாண்டு நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்விற்கு முதலமைச்சர் அழைக்கப்படவில்லை என்பதோடு அதற்கு சந்திரிக்கா அம்மையார் அழைக்கப்பட்டு நிறப்புரை ஆற்றவைக்கப்பட்டார் என்பதையும் நோக்கலாம்.

முதலமைச்சர் ஓர் பொய்யர் எனவும் ரணில் கூறித்திரிந்த வேளையிலும் கூட்டமைப்பின் தலைவர்கள் ரணிலுக்கு சார்பான ஒர் மௌனத்தைக் கடைப்பிடித்து வந்தனரே தவிர தமது கட்சியைச் சார்ந்த வடமாகாண முதலமைச்சரை சந்திக்கவில்லை என பிரதமர் உண்மைக்கு மாறாக கருத்து தெரிவிக்கின்றார் என்ற உண்மை நிலையை எடுத்துரைக்க முன்வரவில்லை.

மாறாக யாழ்வந்த பிரதமர் ரணிலை சிறப்பாக வரவேற்று தமது நட்புவட்டத்தை தமிழரசுகட்சி தலைவர் மாவை முதல் முக்கியமான தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமது கட்சிக்காரரான கூட்டமைப்பின் தலைவர்களே தம்மை கைவிட்டுவிட்டனரே என்கின்ற கோபம் விக்னேஸ்வரனுக்கு அப்போது எழுந்திருந்ததாக கூறப்படுகின்றது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு த.தே.கூட்டமைப்பால் நடாத்தப்பட்டபோதுகூட இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் தொடர்பிலும் முரண்பாடான கொள்ளையை கொண்டிருக்கும் சம்பந்தன்,சுமந்திரன் கலந்துகொள்வில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட யாழ்ப்பாணம் வந்த சம்பந்தன் மறுநாள் சுமந்திரனுக்கான வடமராட்சி பிரச்சாரத்திலும் கலந்துகொண்டிருந்தவருக்கு இலட்சக்கணக்கில் மடிந்த எமது மக்களுக்காக ஒருமணிநேரம் ஒதுக்கமுடியாதா எனவும் அப்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் குறைபட்டு கொண்டதை நாம் நினைவுபடுத்தலாம்.

இவை எல்லாவற்றையும் தொகுத்து பார்க்கின்றபோது த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால செயற்பாடுகள், த.தே.கூட்டமைப்பு கொள்கையாக ஒருசிலரால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவுகளால் சர்வதேச அளவில் எமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பவற்றை நன்கு ஆராய்ந்த பின்னரே முதல்வர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அறிய வருகின்றது.

அண்மைய அமெரிக்க மற்றும் பிரித்தானிய பயணங்களின் போது த.தே.கூட்டமைப்பின் தலைமைகளின் ராஜதந்திரம் எனச்கூறி செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் பல முறைப்பாடுகள் காத்திரமான சான்றுகளுடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன்பின்னரே முதல்வர் இவ்வாறான ஒரு இறுதி முடிவுக்கு வந்திருப்பதாக அறிய வருகின்றது.

முதல்வரின் இந்த அறிவிப்பு தொடர்பில் இதுவரை முதல்வரோடு அனுசரைணையாளராக இருந்த மாகாண அமைச்சர்களில் சுகாதாரம் சம்பந்தமான ஒருவருக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்றும் முதல்வர் தமிழரசுக்கட்சிக்கு சார்பாக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாக தெரிகின்றது.

இவ்வாறு கடுமையான முடிவை முதலமைச்சர் எடுத்தமையானது நேரடியாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும்படி மக்களைக்கோருகிறாரா என யாழ். மாவட்டக் கூட்டமைப்பின் மூத்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் தன் கொள்கைக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்பதற்காகவே விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த ‘நடுநிலை’ நிலைப்பாட்டை எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்கினேஸ்வரனின் ‘நடுநிலை’க்கு விளக்கமே கொள்கை தவறும் கூட்டமைப்பின் உறுப்பினர்களை புறக்கணியுங்கள்! நேர்மையான தேசியத்திற்கு தேவையானவர்களை தெரிவுசெய்யுங்கள் என்பதுதானாம்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila