"தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் குறைந்தளவு அதிகாரப்பகிர்வை பெரும்பாலான மக்கள் எதிர்க்கக்கூடும். மேலும், இலங்கையில் காணப்படும் தற்போதைய சூழ்நிலைப்படி வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கூடுதலான அதிகாரப்பகிர்வை எதிர்பார்கின்றனர். அதாவது வடக்கு - கிழக்கை தாமே ஆளும் அளவிற்கு அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் குறைந்தளவு அதிகாரப்பகிர்வை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. எதிர்காலத்தில் இலங்கையில் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு குறித்த அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுக்குமா? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். |
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் பகிரப்படாது! -ஜயம்பதி விக்கிரமரத்ன
Add Comments