மாவையைச் சந்தித்துப் பேசினார் முதலமைச்சர்!


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசாவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.  யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின், அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் நடைபெற்றது.
 
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசாவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின், அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் நடைபெற்றது.
           
அண்மைய அரசியல் முரண்பாடுகளுக்குப் பின்னர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், முதல்வர் விக்னேஸ்வரனும் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா-
வடமாகாணசபையில் உருவாகிய பிரச்சினைகள் குறித்தும், எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள்தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம். மேலும் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளிலோ இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எங்களுக்குள் பிரச்சினைகளோ குழப்பங்களோ இல்லாது செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம்.
அதேபோல் வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதலமைச்சரான பின்னர்இந்த இடத்திற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. காரணம் அவருடைய வெற்றிக்காக உழைத்த இடம் இன்றைய சந்திப்பு நடைபெற்ற இடமாகும். அதேபோல்வடக்கு மாகாணசபையில் உண்டான குழப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பாடல்கள் மற்றும்மதத்தலைவர்களான யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞனாப்பிரகாசம், நல்லை ஆதீனமுதல்வர் ஆகியோரது சமரச முயற்சிகளின் தொடர்பாக பேசியிருக்கின்றோம்.
வடக்கு மாகாணசபை எமக்கு மிகப் பெரிய பலத்தைக் கொண்ட சபையாகும். மாகாணசபை பிளவுபட்டிருப்பது எமது இனத்தின் விடுதலைக்கு எவ்வகையிலும் உதவியாக இருக்க இயலாது. அமைச்சு பதவிகளுக்காக சண்டை போடுவதில் அர்த்தமில்லை. அப்படி இருக்கவும் கூடாது. சபையில் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்குக் காரணம் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் இரு அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்குவதாகவும் குற்றம் காணாத இரு அமைச்சர்களை விடுப்பில் செல்லுமாறு கூறியதில் இருந்து ஆரம்பித்த பிரச்சினைதான் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை கொண்டு சென்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தோம். தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமரசத்திற்கு பின்னரான சூழ்நிலையில் எங்களுடைய இலக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை எதிர்காலத்தில் ஏற்பது அல்ல. போராட்டங்களை நடத்துவது அல்ல. அமைச்சுப் பதவி என்பது ஒரு சிறிய விடயமாகும். எங்களுடைய முக்கிய விடயம் எங்களுடைய இனம் பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்துள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு சர்வதேசசமூகம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நேரத்தில் பாராளுமன்றத்திலும் இதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும் மேலும் மீள் குடியேற்றம், இராணுவத்தினரால் காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் போன்ற விடயங்களும் நல்லாட்சி அமைக்கப்பட்டுள்ள போதும் அது மக்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நிலையில் இவை தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில்இருவரும் கலந்துரையாடினோம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதில்இணக்கப்பாட்டைக் கண்டுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் இத்தகைய பிரச்சினைகள் எழாது செயற்படுவது தொடர்பிலும் இணக்கம்கண்டுள்ளோம்.
தற்போது கிடைத்துள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை நாங்கள் முறையாக பயன்படுத்தி தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு இயங்குவதற்கு இணங்கியுள்ளோம்.எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர்களுடனும் முதலமைச்சருடனும் கலந்துரையாடுவது என்பதில் இணக்கம் கண்டுள்ளோம். மேலும் வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள மாகாண அமைச்சர்களை நியமித்தல் தொடர்பில்எதிர்வரும் வாரத்தில் கூட்டமைப்புக் கட்சித் தலைவருடன் சந்தித்து கலந்துரையாடுவதுதொடர்பிலும் இணக்கம் கண்டுள்ளோம் என்றார்.




Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila