சிங்கள குடியேற்றம் ,காணி பிடிப்பு என சொன்னதை சொன்னதையே திரும்ப திரும்பப்பேசவேண்டாமென சீறிப்பாய்ந்துள்ளார் வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்
வடமாகாணசபையின் 100 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை கைதடியிலுள்ள பேரவை கட்டடத்தனில் இடம்பெற்றிருந்தது. இதுவரை வடமாகாணசபையினில் 400 வரையிலான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அமர்வொன்றிற்கு தலா 5 இலட்சம் செலவீனமென்ற அடிப்படையினில் இதுவரை வடமாகாணசபை அமர்வுகளிற்கு மட்டும் சுமார் 5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணி;ப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையினில் இன்றைய அமர்வினில் முல்லைதீவினை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வவுனியா,முல்லைதீவு மற்றும் மணலாறு பகுதிகளினில் முன்னெடுக்கப்படும் புதிய சிங்கள குடியேற்ற திட்டங்கள் தொடர்பினில் அம்பலப்படுத்த முற்பட்ட போதே சிங்கள குடியேற்றம் ,காணி பிடிப்பு என சொன்னதை சொன்னதை திரும்ப பேசவேண்டாமென சீ.வி.கே.சிவஞானம் சீறிப்பாய்ந்துள்ளார்.
பிரதேச செயலக மட்டத்தினில் முன்னெடுக்கப்படும் குறித்த குடியேற்ற திட்டத்தினில் குடியேறும் குடும்பமொன்றிற்கு குடியிருக்க கால் ஏக்கர் காணியும் விவசாயத்திற்கு ஒரு ஏக்கர் காணியும் வழங்கப்படவுள்ளது.அத்துடன் வளர்க்க இரு ஆடுகள்,தையல் இயந்திரம்,வீடமைப்பு திட்டமென பல சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் கிராமங்களுள் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பினில் து.ரவிகரன் பேச முற்பட்டுள்ளார்.
அப்போதே குறுக்கிட்ட அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் எடுத்ததற்கெல்லாம் சிங்கள குடியேற்றம்,பௌத்த மயமாக்கல் என பேசவேண்டாமென தடுத்து உரையாற்ற அனுமதித்திருக்கவில்லை.
Add Comments