திருகோணமலை, நிலாவெளி, கச்சினைக்கல் பகுதியில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலாவெளிப் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டடோர், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகத் தோட்டப் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வந்த காணியை, இன்றைய தினம் அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட வேளை, இந்த முறுகல் நிலை உருவாகியது.
அதனையடுத்து, குறித்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.