சுமார் 30 சொகுசு வாகனங்களை சட்டமுறைக்கு எதிராக இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் சாந்தனி விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏற்றுமதி, இறக்குமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,குறித்த வாகனங்களுக்கு, வாகனம் ஒன்றுக்கு 3 மில்லியன் ரூபா என்ற அளவில் வாகன இறக்குமதி தீர்வை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பழைய வாகனங்களும் இந்த இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comments