உண்ணாவிரத கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது!

அனுரதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்சன், இராசையா திருவருள், கணேசன் தர்சன் ஆகியோரை இன்று அனுதரபுரம் சிறைச்சாலையில் சென்று சந்தித்தோம்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் பொது அமைப்புக்கள் சார்பாகஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்தீலீசன் ஆசிரியர், கிராமி உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் இன்பநாயகம்,
தமிழ் மக்கள் வாழ்வுரிமை இயக்க இணைப்பாளர் எஸ்.சோதிலிங்கம்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அனுரதபுரம் சென்று கைதிகளை  சந்தித்திருந்தார்.
kajan-2
தமது வழக்குகள் வவுனியாவுக்கு மாற்றப்பட்டால் மட்டுமே உண்ணாவிரதத்தை தம்மால் கைவிட முடியும் எனவும் வழக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று சாதகமான பதில் வராது விட்டால் தாம் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்றும் கூறினர்.
அவர்கள் மூவரும் 31வது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருவதனால் அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
kajan-3
kajan-1
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila