வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, அவுஸ்திரேலியாவில் கல்வியைத் தொடர வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தார். எனினும் அவரது விண்ணப்பத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்க முன்னதாகவே மரியதாசன் ஜேகூ, அவுஸ்திரேலியா சென்றுவிட்டார்.இதனால் ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஜெகூ மீள கடமைக்கு அழைக்கப்பட்டார். அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், தனது வெளிநாடு செல்லும் விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்குமாறும் கோரி, ஜேகூ யாழ். மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் பின்னர் மனுவில் அவர் கோரிய அனுகூலங்களை மேல் நீதிமன்று நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று முன்தினம் வழங்கினார். இதன்போது, “வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றுக்கு உள்ளது. அதனடிப்படையில் மனுதாரர் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க மன்று கட்டளையிடுகின்றது. இந்தக் கட்டளையின் பிரதி அவுஸ்திரேலிய தூதரகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டிருந்தார். இந்த நிலையில், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் குறித்த கட்டளைக்கு எதிராகவே மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. |
ஆளுனருக்கு எதிரான யாழ். மேல் நீதிமன்றத் தீர்ப்பு! - மேல்முறையீடு செய்ய சட்டமா அதிபர் திட்டம்
Related Post:
Add Comments