இங்குள்ள மலைகளில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த பிராகிருத மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு பல பொக்கிசங்களை தாங்கியுள்ள மலையை அபகரிக்க பௌத்த துறவிகள் சிலர் முயன்று வருகின்றனர்.
எனினும் அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அது தடுக்கப்பட்டு தற்போது மலை உச்சியில் ஆதி சிவன் ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஐயனார், பிள்ளையார், ஐயன் சாமி என்பனவற்றையும் வைத்து வழிபட்டு வருகின்றார்கள்.
இந்த இடம் வரலாறுகளை சுமந்து இருப்பது மட்டுமல்லாது, வடக்கின் சுற்றுலாவின் பிரதான தளத்தையும் தன்னகத்தே வைத்துள்ளது. ஆனால் பலராலும் இன்று வரை இந்த மலை அறியப்படாமலே இருக்கின்றது. இதனை காப்பாற்ற அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அடுத்து வருகின்ற சந்ததிகள் இந்த மலையை மறந்து விட்டால் எம்மிடமிருந்து அந்த மலை பறிபோய்விடும், அந்த மலையை பாதுகாப்பதற்கு தற்போது எம்மிடம் உள்ள ஒரே வழி தமிழ் மக்கள் அதிகளவில் அங்கு சென்று வர வேண்டும்.
நீங்கள் பாதுகாவலராக சென்று வராவிட்டாலும், ஒரு சுற்றுலாவாக சென்று வாருங்கள். நீங்கள் எங்கும் காணாத ஒரு புதுமையை அந்த மலை தந்து விடும்…
[குறிப்பு- இந்த காணொளி அங்கு தற்செயலாக சென்ற போது இந்த மலை வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக தொலை பேசியை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்டது.