இலங்கை இராணுவத்தின் வைத்தியர் ஒருவர் மற்றும் இரண்டு இராணுவ கேப்டன்கள் ஆகியோர் கூட்டாக சிங்கள தாதியான பெண்ணொருவரை கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
தமிழர் பகுதியில் அதிலும் இறுதி யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பில் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் தெற்கு கள்ள மௌனம் சாதித்துவந்தது.
தற்போது சொந்த சிங்கள யுவதிகளை சிங்கள இராணுவம் தீண்ட தொடங்கியதும் பெண்ணிய அமைப்புக்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.
கூட்டு பாலியல் வல்லுறவில் அடையாளம் காணப்பட்டுள்ள முதல் சந்தேக நபர் இலங்கை இராணுவ கேப்டன் ஆவார். இவர் மருத்துவராக இராணுவ மருத்துவமனையில் பணிபுரிகிறார். மற்றொருவர் இராணுவ பொலிஸார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஜூலை 12 ஆம் திகதி தினேஸ் எனப்படும் குறித்த கேப்டன் குடும்பத்தை கொலை செய்வதாக அச்சுறுத்தி குறித்த சிங்கள தாதியை கடத்தி சென்று கூட்டாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார். இதனை வீடியோக்கள் எடுத்ததுடன் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
அவர் மீதான பாலியல் துஸ்பிரயோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவர் நிராயுதபாணியாகவே இருந்துள்ளார். மரணத்தை தழுவ இருந்த அப்பெண்ணிற்கு இறுதியில் தினேஸ் என்ற இராணுவ மருத்துவரே மருத்துவ சிகிச்சையளித்துமுள்ளதாக பெண்ணிய அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படை அதிகாரியான தினேஸின் மனைவி மூன்றாவது குழந்தையை பிரசவிக்கவுள்ளார். இந்த கூட்டு பாலியல் வல்லுறவுடன் தொடர்புடைய மற்றொரு இராணுவ புலனாய்வு அதிகாரி கேப்டன் அமித் விசாரணைகளிற்கு சமூகமளிக்காமையால் இராணுவத்தினரால் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இந்த காவல்துறை திண்டாடிவருகின்றது. கேப்டன் மற்றும் பொறியாளர் ஆகியோர் நாட்டில் உயர் பதவிகளில் உள்ளனர்.