ஊழல்வாதியா வல்வை நகரசபைத் தலைவர்?


sivagi
வல்வெட்டித்துறையின் நகரசபைத் தலைவராக தெரிவாகியுள்ள கோணலிங்கம் கருணானந்தராசா தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஈபிடிபி மற்றும் சிங்களபேரினவாதக்கட்சியான சிறீலங்காசுதந்திரக் கட்சியின்; ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக கூட்டமைப்பின் கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த நகரசபைத் தேர்தலில் தோல்வியைத்தழுவிய கோ.கருணானந்தராசா பின்னர் க.சிவாஜிலிங்கம் வடமாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டபின் அடுத்தபட்டியலில் இருந்ததால் நகர சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
vvt-1
அவர் உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் நகரசபைக்குச் சொந்தமான சிற்றுண்டிச்சாலையில் ஒருஏழைப் பெண்ணிடம் இருந்து கப்பமாக ரூ275,000.00 மோசடி செய்து கையும் மெய்யுமாக ஆதாரத்துடன் அகப்பட்டதாக முன்னாள் நகரசபை தலைவர் ஆனந்தராஜா தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் அவரைக்கட்சியில் இருந்தும் நீக்கவேண்டும் என்றும் நகரசபையில் அவரது உறுப்புரிமை நீக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் சிவாஜிலிங்கத்தின் விசுவாசியான கோ,கருணானந்தராசா வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.நல்லூரில் தேங்காய் உடைக்கும் சிவாஜிலிங்கத்தின் உதவியாளராக இருந்தமை மட்டுமே தகுதியாக கொள்ளப்பட்டுள்ளது.
அதே போன்று நிதி மோசடிக்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு குற்றவாளியாகக் கருதப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும ரெலோவின் விசுவாசியான’கேசவன்’என்று அழைக்கப்படும் ஆறுமுகம் ஞானேந்திரன் என்பவர் குறைந்தவாக்குகளினால் வென்று உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கே.சிவாஜிலிங்கத்தின் இத்தகைய போக்குகளால் ஏற்கனவே மற்றொரு கையாக செயற்பட்ட உறுப்பினர் ந.சதீஸ் எதிர்த்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப புள்ளியாக அடையாளப்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை தமிழரசுக் கட்சியினராலேயே ஒட்டுக் குழு என்றும்,கொலைகாரர்கள் என்றும்,மண்கொள்ளையர்கள் என்றும் மேடைமேடையாகக் குற்றம் சாட்டப்பட்டு துரோகியாகத் தூற்றப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி மற்றும் தமிழர் விரோதநடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் மைத்திரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தமை மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.sivagi
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila