அமைதி நிலை ஏற்பட்டுள்ளது வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துரைப்பு

நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்து வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவ லகத்தில் ஒன்றுகூடப்பட்டிருந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதி த்துவப்படுத்தி உயர் ஸ்தானிகர்கள், தூதுவ ர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கல ந்துகொண்டனர்.

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்க ளில் கலவர சூழலை ஏற்படுத்த காரணமான வர்களையும் கலவரங்களில் ஈடுபட்டவர்க ளையும் கைதுசெய்து அதிகபட்ச தண்ட னையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தான் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு க்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனா திபதி தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக ஐக்கிய நாடுக ளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட் டத்தொடர் இடம்பெறும் மார்ச் மற்றும் செப் ரெம்பர் மாதங்களில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் செயற்பட்டுவரு வது அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனா திபதி மேலும் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருட காலமாக நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும்  ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் முழுமை யான அர்ப்பணிப்பை செய்துள்ளதாக குறிப்பி ட்ட ஜனாதிபதி, எதிர்காலத்திலும் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவி த்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட் டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத் தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலா ளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் இந்நிக ழ்வில் கலந்துகொண்டனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila