
அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் முரணான வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்துள்ளார்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளோம். வழக்கு தொடர்வது தொடர்பில் சட்ட வல்லுனர்களுடன் பேசப்பட்டு வருகின்றது.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டையும் கேட்டறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.