மைத்திரியுடன் இணைந்து செயலாற்றத் தயார்: டக்ளஸ் தேவானந்தா - 2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரி ஆட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இன்றைய தினம் மைத்திரிபால சிறிசோன தனது பதவியை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் குறித்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார்.
நாம் இணக்க அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்களுடனும் பேசி கொள்கை ரீதியான உடன் பாட்டுடன் நாம் செயற்பட்டோம்.
அந்தவகையில் புதிய ஆட்சியிலும் அவ்வாறான ஏது நிலைகள் உருவாகுமானால் அதனை பரிசீலிக்கவும் அவர்களுடன் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் நிலையில் இருக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல்!-  2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு முடைவந்துள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற வாக்கு பதிவுகளும் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குப் பதிவுகளும் ஒரு பார்வை
மாவட்டம்                2015    -     2010  வாக்களிப்பு வீதங்கள்
கொழும்பு                     75        -    77.06
கம்பகா                         65        -     79.66
கண்டி                           75        -     78.26
மாத்தளை                    75        -     77.94
நுவரெலியா                 80        -     77.19
திருகோணமலை        72        -     68.22
காலி                             79       -      80.25
மாத்தறை                    73        -      78.60
அம்பாந்தோட்டை       70       -       80.67
களுத்துறை                 70       -       81.01
யாழ்ப்பாணம்               61      -       25.66
வன்னி                           70      -        40.33
மட்டக்களப்பு                60     -         64.83
திகாமடுல்லை             70      -        73.54
குருநாகல்                     77      -         78.62
புத்தளம்                         71     -       70.02
அனுராதபுரம்                76      -       78.35
பொலன்னறுவை         80      -        80.13
பதுளை                          60      -       78.70
மொனராகலை             75      -       77.12
இரத்தினபுரி                   70       -       81.24
கேகாலை                      70       -       78.76
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila