தமிழின அழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை களை இதுவரை கொழும்பு தமிழ் அரசியல் தலைமை உலக நாடுகளிடம் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை.
இலங்கை அரசுடன் ஒத்துப்போவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் கொழும்பு தமிழ் அரசியல் தலைமையின் செயற் பாடுகள் உள்ளன. ஆக, தேர்தல் காலங்களில் மட்டும் உசுப்பேத்துதல் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாக நிலைமை உள்ளது.
இத்தகையதொரு சூழமைவில் ஆளும் தரப்பு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடித் திரிந்து சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்வதில் தீவிரம் காட்டுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்று இந்தியப் பிரதமர் மோடி யைச் சந்தித்து ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்க ஜனாதிபதியுடனும் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஆக, குற்றமிழைத்த தரப்பு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று தங்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை தடுத்து நிறுத்தி தப்பித்துக் கொள்ளும் தந்திரோபாயங்களில் ஈடுபட்டுக் கொண்டி ருக்க, போரினால் பாதிக்கப்பட்ட தமிழினம் இந்தியப் பிரதமரையோ அமெரிக்க ஜனாதிபதியையோ சந் தித்து ஐயா! நாங்கள் இழந்தவர்கள்; எங்கள் இனத்தை இலங்கை ஆட்சியாளர்கள் கொன்றொழித்த னர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயினர். கணவனையிழந்து, குடும்பங்களைக் கொண்டு நடத்த முடியாத அபலைப் பெண்களின் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாக உள்ளது என்று எடுத்துரைப்பதற்கு எங்களுக்கு அரசும் இல்லை; ஆட் களுமில்லை.
இந்த நிலைமையில் தமிழர்களுக்கு நடந்த கொடு மைகளை எடுத்துக் கூறி இலங்கை அரசின் முயற் சிகளை முறியடிப்பதற்கு எங்களால் இயலாமல் உள்ளது. உள்ளக விசாரணை என்று கூறி உலகை ஏமாற்ற நினைக்கும் இலங்கை அரசு, சில சந்தர்ப்பங்களில் தமது ஏமாற்று நாடகத்தைப் பகிரங்கமாகியுள்ளது.
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் உரை யாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியுள்ளேன் என்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான் ஜனாதி பதியானதால் இலங்கை மீதான ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் நீக்கப்பட்டன என்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளரால் எந்த இடத்திலும் கூறப் படவில்லை என்கிறார்.
ஆக இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் பாதிக் கப்பட்ட தமிழினத்துக்கு எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வதற்கு இந்த உலகில் நீதியாளர்கள் எவருமே இல்லையா? என்று கேட்பதை - ஏங்குவதைத் தவிர வேறு எதைத்தான் சாதாரண தமிழ் மக்கள் செய்ய முடியும்?
தமிழினத்தை கொன்றொழித்த கொடுமை தந்த நெடுந்துயரத்தைவிட, இப்போது குற்றவாளிகளைக் காப்பாற்றி, பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு மேலும் பாத கம் செய்ய இலங்கை ஆளும் வர்க்கம் செய்யும் முயற்சிகளைப் பார்க்கும் போது இதயம் வெந்து புண் ணாகிப் போகிறது. என்ன செய்வது?
நான் ஜனாதிபதியானதால் குற்றச்சாட்டுக்கள் குறைந்தன என்று மைத்திரிபால சிறிசேன கூறுவது போல, நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்ததால் தான் சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்ற விசாரணையை நடத்தும் என்ற முடிபை உலகம் எடுத்ததென்று நம்மவரால் கூற முடியுமா என்ன? ஆக, எங்கள் தலைவிதி எப்படி என்பதை அழு கண்ணீ ரோடு இருந்து பார்ப்போம் அவ்வளவுதான்.