தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப்பதற்காக சுயமாக செயற்படவேண்டும் என்று மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோதும் அந்த நோக்கம் இன்றுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கல் தொடர்பிலான குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதேச சபை தலைவர்களுக்கு சர்வாதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாகாண சபைகளுக்கு சுயமாக செயற்படும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்ததுடன் பிரதேச சபை தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சர்வாதிகாரத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஐ.தே.க ஆட்சியில் சுதந்திரக் கட்சி ஆட்சி புரியும் மாகாண சபைகளுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டதுடன் சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் ஐ.தே.க ஆட்சியில் உள்ள மாகாண சபைகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று ஐ.தே.க சுதந்திரக் கட்சி கூட்டாட்சியிலும் மாகாண சபைகளுக்கு நிதி குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டியதுடன் மாகாண சபைகள் சுயமாக இயங்க வேண்டுமென கொண்டுவரப்பட்டதாகவும் இன்றுவரை அது நிறைவேறவில்லை என்றும் கூறினார்