வாள் வெட்டில் டிகிரி முடித்த யாழ் ரவுடிகளுக்கு நீதிபதி சொன்ன அறிவுரை என்ன என்று தெரியுமா ?
வரலாற்றில் யூத இனத்திற்கு தனி இடமுண்டு,அவர்கள் தமது நாட்டினை கட்டியெழுப்புவதற்காக எந்தளவு தியாகங்கள் செய்து இஸ்ரேல் எனும் தேசத்தை கட்டியெழுப்பினார்களே அதே போன்ற அர்ப்பணிப்புக்காக தனது இனத்துக்காக உயிரை கொடுத்த இளைஞர்களுக்கு மத்தியில்,
இன்று பிறரை வாளால் வெட்டும் இளைஞர்கள் தோன்றியுள்ளனர். உலகிலேயே எமது தியாகங்களுக்கு நிகரான தியாகம் எங்கும் நடைபெறாத நிலையில், அவர்கள் சிந்திய இரத்தம் எல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சநிலை எமக்கு தோன்றியுள்ளது.
வீரத்திற்கு பெயர் போன தமிழினம், தற்போது நடைபெறும் வாள்வெட்டுக்களால் பயந்து ஒடுங்கி போயுள்ளது. எமது வரலாறுகள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் ஒழுங்காக பதிவு செய்யப்படுமாக இருந்தால் அவற்றை பார்க்கும் இளைஞர்கள் வழிதவறி செல்ல மாட்டார்கள்.
நீதவான் ஏ.யூட்சன்
மல்லாகம் நீதிமன்றம்