கைக்குண்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, க.பொ.த உயர்தரத்தில் கற்றுவரும் மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நிராகரித்த யாழ்.மேல் நீதிமன்றம், குறித்த மாணவன் சிறையிலிருந்தவாறே பரீட்சை எழுதுவதற்கான அனுமதியை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே மாதம், கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தாக குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி ஒன்றில் கல்விகற்றுவந்த செந்தூரன் எனும் மாணவன் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், மாணவன் செந்தூரன் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளதால், அவரது எதிர்காலம் கருதி பிணையில் விடுவிக்குமாறு, யாழ்.மேல் நீதிமன்றத்தில் அவரது பெற்றோர் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கின் பாரதூரம் கருதி மனுவை நிராகரித்த நீதிபதி, குறித்த மாணவன் பரீட்சை எழுதுவதற்கான அனுமதியை நீதவான் நீதிமன்றில் பெறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தினார். மாணவனின் எதிர்காலம் முக்கியமானதாக கருதப்பட்டாலும், அதனை விட மக்களின் பாதுகாப்பு முக்கியமானதென குறிப்பிட்ட நீதிபதி இளஞ்செழியன், குறித்த மாணவன் உள்ளிட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் யாழ்.மாவட்டத்தின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், அவரை பிணையில் விடுவிப்பது யாழ்.குடாநாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாட்டை ஏற்படுத்திவிடும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, மாணவன் செந்தூரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பில், யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் நீதவான் இளஞ்செழியன் குறிப்பிட்டு, வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
செந்தூரனுக்கு பிணையில்லை : சிறையிலிருந்து பரீட்சை எழுத அனுமதி

Related Post:
Add Comments