வடக்கு மாகாண முதலமைச்சருக்காக வாதாடினார் சம்பந்தன்!

வடக்கு மாகாண முதலமைச்சருக்காக வாதாடினார் சம்பந்தன்!

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நீதி கிடைக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
எழுக தமிழ் நிகழ்வில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் எனக் கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் திரிபுபடுத்தப்பட்டவையெனவும், பல விடயங்களை அவர் வெளியிடவேயில்லையெனவும் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன, அரசாங்கத்திடம் அதற்கான பதிலைக் கோரியிருந்தார்.
நேற்று முனதினம் நடைபெற்ற நடாளுமன்ற அமர்வின்போதே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேலேய இரா.சம்பந்தன் தனது உரையை வடக்கு மாகாண முதலமைச்சருக்காக உரையாற்றியிருந்தார்.
அவரின் உரையில் தெரிவித்திருப்பதாவது,
”எழுக தமிழ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு அவர் மறுப்பும் வெளியிட்டிருந்தார். அவர் இந்த சபையில் இல்லாத நிலையில், அவருக்கு இங்கு நியாயம் கிடைக்க வேண்டும்.  விக்னேஸ்வரனின் உரையின் தமிழ் வடிவம் எனக்குக் கிடைத்திருந்தது. அதை வாசித்து நான் அறிந்ததில் அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை அவர் கூறியிருக்கவில்லை”
அவர் மிகவும் பொறுப்பான நபர். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சராக இருக்கும் அவர், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். வடக்கு மக்கள் அவரை கணிசமான பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்துள்ளனர். ஆகவே, அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் கருத்துக்களை தாம் வெளியிட்டிருக்கவில்லை என்று அவர் கூறும்போது, இதுபற்றி கருத்து வெளியிடுபவர்கள் அதற்கு முன்னதாக உண்மை என்னவென்பதை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும் என இரா சம்பந்தன் நாடாளுமன்றிடம் கோரியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila