விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் இருந்த கடற்படைத் தளமான ராஜாளியிலிருந்தே இந்த விமானம் நீண்டதூரக் கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ரியூ 142 எம் விமானத்தை, சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு நேற்று அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றியபோதே கடற்படைத் தளபதி,
‘விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பை இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானமான ரியூ 142 எம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.
அதேபோல் ரியூ 142எம் மாலைதீவில் நடைபெற்ற ஒப்பரேசன் கக்டஸ் நடவடிக்கையிலும் முக்கிய பங்காற்றியது.