கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா?

Keppapulavu Mullitivu 03

தமிழ் மக்களது மீள்குடியேற்றத்திற்கென சர்வதேச சமூகம் தரும் நிதியை பயன்படுத்தி படையினரிற்கு காணிவாங்கும் அரசின் நடவடிக்கை பற்றி வாய்திறக்க தமிழ் அரசியல் தலைமைகள் ஏன் பின்னிற்கின்றவென்ற கேள்விகள் எழுந்துள்ளன.இவை தொடர்பினில் தமிழ் மக்கள்; பிரதிநிதிகள் வாய்மூடி தம்மை ஏமாற்றி விட்டதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களுடைய போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கேப்பாபுலவு மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படடு வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாகவும் கேப்பாபுலவு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
தமக்கு அரசாங்க காணிகள் வேண்டாம் எனவும் அரசகாணிகளில் இராணுவத்தை குடியமர்த்திவிட்டு சொந்த காணிகளை வழங்குமாறு மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்களின் அழைப்பை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான துiராசா ரவிகரன், கந்தையா சிவனேசன் ஆகியோர் மாத்திரமே சென்றிருந்ததாகவும் ஏனைய உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila