
வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசம் போதுமானதா என்று கூற முடியாது. ஆனால் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ,நா, மனித உரிமை ஆணையாளர் இலங்கை மீது அதிருப்தி வெளியிட்டதாக நாங்கள் கருதவில்லை.
அவர் மனித உரிமை ஆணையாளர் என்ற வகையில் கருத்து வெளியிட்டு ள்ளார். அதனை அதிருப்தியாக நாங்கள் பார்க்கவில்லை.
அவர் என்ன கூறினாலும் நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையு டன் இணைந்து பயணிப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்,
ஐக்கிய நாடுகள் சபையில் உலகத்தின் புதிய போக்குக்கு அமைய மறு சீரமைப்பு முன்னெடுக்கப்படவேண்டும் என்நு இலங்கை கருதுகின்றது. அதே போன்று ஐககிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதி பதியுடன் நியுயோர்க் வந்துள்ள வெ ளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் நேற்று இலங்கை ஊடகவியலாளர்களுக்காக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ் விடயங்களை குறிப்பிட்டார்.
நியுயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லோவ்ஸ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றியமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தலைமையில் இந்த 72 ஆவது பொதுச் சபை அமர்வு நடைபெற்றது.
அத்துடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பும் பங்கேற்பும் முக்கிய மானது, இவர்கள் இருவரும் என்ன கூறப்போகின்றார்கள் என்பதனை உலகம் பார்த்துக்கொண்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை என்பது மக்களுக்கான அமைப்பாகும்.
அது நாடுகளுக்காகவோ தலைவர்களுக்காகவோ அமைக்கப்படவில்லை. மா றாக மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இம்முறை வெளிவவகார அமைச்சர் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க வில்லை. பாராளுமன்றத்தில் முக்கிய கடமை இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
அதனால் நாங்கள் அதற்கு எங்கள் உயர்மட்ட பங்களிப்பை வழங்குகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மறுசீரமைப்பு தொடர்பான அமர்வில் ஜனாதிபதி பங்கேற்றார். காரணம் ஐக்கி்ய நாடுகள் சபையில் பாரிய மாறறம் கொண்டு வரப்படவேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
அந்தவகையில் 72 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி பொருத்தமான உரையை நிகழ்த்தினார்.
குறிப்பாக பரிஸ் உடன்படிக்கையை அமுல்படுத்தவேண்டும் என்ற ஜனா திபதியின் கோரிக்கை மிகவும் முக்கியமானது.
அத்துடன் நல்லிணக்கம் மீள்நிகழாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஜனா திபதி உரையாற்றியதுடன் மெதுவான மற்றும் நிலையான பயணத்தை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியையும் அவர் கோரினார்.
இங்கு ஜனாதிபதி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதி நிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினார்.
அத்துடன் சார்க் வெளிவவிகார அமைச்சர்கள்அமர்வு நடைபெற்றது.
பொதுநலவாய செயலகத்தின் அமர்வு ஒன்றும் நடைபெற்றது. மேலும் ஜனா திபதி அணிசேரா நாடுகளின் அமைப்பின் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
பலஸ்தீன மக்களின் உரிமை குறித்தும் நாங்கள் உறுதியுடன் இருககின்றோம். இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவவேண்டும், இருநாடு என்பதே எமது கொள்கையாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இலங்கை ஸ்திரமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் என்பது எமது அமைப்பு.
ஐக்கிய நாடுகள் சபை எம்மை கட்டுப்படுத்தவில்லை.
மாறாக நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையை வழிநடத்துகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை, ஜனாதிபதி ஐ,நா, செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
கேள்வி
இலங்கை இரண்டு வருட கால அவகாசத்தை கோரியமை தொடர்பில் ?
பதில் :-
ஜெனிவா மனித உரிமை பேரவைளில் 2015 ஆம் ஆண்டு பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் எமது அர்ப்பணிப்பு காணப்பட்டது. அதனா ல்தான் நாங்கள் அதற்கு அனுசரணை வழங்கினோம்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து செல்கின்றோம்.
எனவே கடந்த முறை எமக்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சில விடயங்களுக்கு நீண்டகால அவகாசம் தேவையாகும். சில விடயங்களில் உயர்மட்ட பங்க ளிப்பு தேவைப்படுகின்றது.
தற்போது மீள்நிகழாமை மற்றும் காணாமல் போனோர் குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.
ஜனாதிபதி கூறியதைப்போன்று மெதுவான நிலையான பயணத்தை முன்னெடுக்கின்றோம்.
அதனால் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது என்பதனை கூறினோம். எமக்கு அது கிடைத்தது. அது போதுமான என்று தெரிய வில்லை. ஆனால் எமது கோரிக்கை ஏற்கப்பட்டது.
கேள்வி
அந்த அளவுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பார்த்து க்கொண்டு இருக்குமா?
பதில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எம்மை புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இநத விடயகளில் கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது.
ஆனால் எமது செயற்பாட்டையும் அர்ப்பணிப்பையும் ஐககிய நாடுகள் மனித உரிமை பேரவை புரிந்துகொண்டுள்ளது.
கேள்வி
ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை மாற்றத்தை விரும்புகின்றதா?
பதில்
ஐக்கிய நாடுகள் சபையில் உலகத்தின் புதிய போக்குக்கு அமைய மறு சீர மைப்பு முன்னெடுக்கப்படவேண்டும் என்நு இலங்கை கருதுகின்றது. அதே போன்று ஐககிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும், குறிப்பாக சைபர் குற்றம் என்ற ஒன்று புதிதாக வந்து ள்ளது.
அதற்கேற்ப மாறவேண்டும். காலநிலை மாற்ற பிரச்சினை வந்துள்ளது, மேலும் 70 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையிலும் பலததிலும் அடிப்படையில் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்போது அந்த நிலை மாறவேண்டும். பாதுகாப்பு சபையில் மாற்றம் வேண்டும்.
கேள்வி
இம்முறை ஜனாதிபதி ஐககிய நாடுகள் பொதுச் சபையில் பங்கு பற்றி யதன் மூலம் இலங்கைக்கு என்ன கிடைத்தது?
பதில்
ஜனாதிபதியின் உரை முக்கியமானது. அதுமட்டுமன்றி 192 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரை யும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் சந்திக்கமாட்டார்.
சுமார் 15 தலைவர்களையே அவர் சநதிப்பார். அதில் எமது ஜனாதிபதியும் இரு க்கின்றார் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
கேள்வி
அரசாஙகம் மெதுவாக பயணிப்பதாக கூறினாலும் அண்மையில் ஐககிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கடும் விமர்சனங்களை முன்வை த்திருந்தாரே?
பதில்
ஐ,நா, மனித உரிமை ஆணையாளர் இலங்கை மீது அதிருப்தி வெளியிட்ட தாக நாங்கள் கருதவில்லை. அவர் மனித உரிமை ஆணையாளர் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதனை அதிருப்தியாக நாங்கள் பார்க்கவில்லை. அவர் என்ன கூறி னாலும் நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்து பயணிப்போம், அவர் உலகின் மனித உரிமை ஆணையாளர்.
எனவே அவர் அவ்வாறுதான் கூறுவார். அது அவரின் கடமையாகும். நாம் அவருடன் பயணிப்போம்.
கேள்வி
இலங்கையின் வெளிவிவகார கொள்கை?
பதில்
புதிய வெளிவிவகார அமைச்சரோ அல்லது வெளியுறவு செயலாளரோ வந்து விட்டார் என்பதற்காக வெளியுறவு கொள்கை மாறிவிடாது.
எங்களுக்கு அமெரிக்கா சீனா ஆகிய அனைத்து நாடுகளுடன் சிறந்த உறவு காணப்படுகின்றது. இந்தியா எமது நெருங்கிய நாடாகும்.
எங்களுக்கு அமெரிக்கா சீனா ஆகிய அனைத்து நாடுகளுடன் சிறந்த உறவு காணப்படுகின்றது. இந்தியா எமது நெருங்கிய நாடாகும்.
கேள்வி
காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் அமைக்கப்படவு ள்ளது. இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்?
சர்வதேசம் என்ன கூறுகின்றது?
பதில்
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்கபடவுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் பாராட்டுகின்றன, இந்த அலுவல கத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்சியை வரவேற்றுள்ளன.
காணாமல் போனோர் விவகாரம் என்பது பாரிய நெருக்கடியான விடயமாகும். வடககில் மட்டுமல்ல தெற்கிலும் காணாமல் போனோர் விவகாரம் உள்ளது.
இது நீண்டகால பிரச்சினையாகும்.
இதனை தீர்க்கவேண்டிய பொறிமுறை எமக்கு தேவைப்பட்டது, சர்வதேச சமூகம் அடிக்கடி கவலைப்பட்ட விடயமாக இது காணப்பட்டது.
எனவே அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஒரு பொறி முறை இல்லாமல் இதனை செய்ய முடியாது.
எனவே இதனூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நாம் நம்புகின்றோம், ஆனால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவேண்டும், அதாவது காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல.
மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வ தற்கான ஒரு பொறிமுறை மட்டுமேயாகும். அதனூடாக காணாமல் போன வர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும்,