தமிழ் மக்களின் அவலத்தை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்

விடுதலைப் போராட்டம் நடந்த காலத்திலும் சர்வதேச நாடுகள் எங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருந்தது.

போர் நடந்த போதும் போருக்கு பின்பும் சர்வ தேச நாடுகள் எங்களை கைவிடாதென்பதே தமிழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனால், சர்வதேச நாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டன என்பது தான் உண்மை.
அண்டை நாடான இந்தியா தமிழ் மக்கள் மீது கடும் கோபம் கொண்டுள்ளது. இலங்கை அரசுடன் சேர்ந்து போகின்ற, தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தாத தமிழ் அரசியல்   தலைமையே தமக்குத் தேவையயன்று அந்த நாடு நினைக்கின்றது.

இஃது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் நினைப்பெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியின்  ஆட்சி நிலைக்க வேண்டும். அதிலும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருக்க வேண் டும் என்பதுதான்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்­ வுக்கான ஆதரவு தென்பகுதியில் அதிகரித்த போது, முதலில் அதிர்ந்து போன நாடு 
அமெரிக்கா என்றே சொல்லவேண்டும்.

அமெரிக்காவை பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நீடிக்க வேண்டும். அதற் குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்பதாகும்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நிலைக்க வேண்டும் என விரும்புகின்ற அமெரிக்கா, ஈழத் தமிழ் மக்களுக்கான எதிர்காலம் பற்றியோ அவர்கள் எதிர் நோக்கும் அவலம் பற்றியோ  சிந்திப்பதாக இல்லை.

இஃது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத் தையும் மனப் பதற்றத்தையும் தந்துள்ளது. 
உண்மையில் இலங்கை மீதான அமெரிக்கா வின் கரிசனை என்பது தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாகவே இருக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்காவோ, மகிந்த ராஜபக்­ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்தால் அது போதும் என்று நினைக்கிறது.

அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சி களை முறியடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதி பதி மகிந்த ராஜபக்­ ஆட்சியைப் பிடித்தால், தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு கணம் ஏனும் அமெரிக்கா சிந்திப்ப தாகத் தெரியவில்லை.
ஆக, அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு பாதகமாகவே அமையப் போகிறது. 

ஐயா! ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் தமிழ் மக்கள் ஏங்கி ஏங்கி சாகின்றனர். 
முன்னாள் போராளிகளின் வாழ்வு ஏக்கத்தி லேயே கடந்து போகிறது.
இந்த மோசமான நிலைமைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முடிவு கட்டு, வன்னி பெரும் நிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர் வதேச விசாரணையை நடத்து என்பதை  அமெரிக்கா செய்வதே ஒரே வழியாக இருக்கும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila