பெண் விரிவுரையாளர் போதநாயகியை கொடுமைப்படுத்தினார் கணவன்! - தாயார் தெரிவிப்பு

தனது மகள் போதநாயகி திருமணமான காலம் முதல் அவரது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்து வந்தது என்றும், அவருடைய கணவன் செந்தூரனால், பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் எனவும், திருகோணமலை கடலில் சடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளர் போதநாயகியின் தாயார், திருமதி நடராஜா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட போதநாயகியின் தாயார் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது, போதநாயகியின் மரணம் தொடர்பாக கேள்வியுற்ற அவரின் கணவன் செந்தூரன் மரணம் குறித்து அதிர்ச்சி அடையாமல் சாதாரணமாக திருகோணமலைக்கு வந்தார் என்றும், சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என முரண்பட்டுக் கொண்டு இறுதிக் கிரியைக்கும் சமூகமளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila